குடியரசு தின அணிவகுப்பு; உத்தரப்பிரதேச அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு!

நாட்டின் 73-வது குடியரசு தின விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லியில் மாநிலங்களின் கலாசாரங்களைக் குறிக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்ற அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது அப்போது பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில், இந்தாண்டு அணிவகுப்பில் 25 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. அதில் உத்தரப்பிரதேசத்தின் சார்பாக இடம்பெற்ற அலங்கார ஊர்திக்கு சிறந்த அலங்கார ஊர்திக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநில அலங்கார ஊர்திக்கு இரண்டாம் பரிசும், பா.ஜ.க-வுடன் கூட்டணி ஆட்சியில் இருக்கும் மேகாலயா மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அலங்கார ஊர்தி

இதைத் தொடர்ந்து, துணை இராணுவப் படைகளின் சார்பாக இடம்பெற்ற அணிவகுப்பில் CISF சார்பாக இடம்பெற்ற அணிவகுப்பு சிறப்பான அணிவகுப்பு படையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சி, மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் அனைவரும் பிரபலமான அரசியல் தலைவர்கள் இல்லை என நிராகரிக்கப்பட்ட நிலையில், ``முதல் பரிசு வழங்கப்பட்ட உத்தரப்பிரதேச அலங்கார ஊர்தியில் காசி விஸ்வநாதர் ஆலயம் தானே இருந்தது அதற்கு எப்படி முதல் பரிசு வழங்க முடியும்" என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

Also Read: அலங்கார ஊர்தி முதல் பாடல் நீக்கம் வரை..! - குடியரசு தின விழா சர்ச்சைகளும் பாஜக விளக்கமும்!



from தேசிய செய்திகள் https://ift.tt/OLSoIvB

Post a Comment

0 Comments