ராகேஷ் நாத் பாண்டே என்ற வழக்கறிஞர், பிரதமர் மோடி ராணுவ சீருடையை அணிந்தது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 140-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கூறி, கடந்தாண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், இந்த வழக்கு தொடரப்பட்டபோது, விசாரணை எல்லைக்கு இந்த வழக்கு உட்பட்டதல்ல என்று கூறி, அப்போதைய மாவட்ட தலைமை நீதிபதி ஹரேந்திர நாத் என்பவர் இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
மாவட்ட நீதிபதியின் இந்த முடிவை எதிர்த்து குற்றவியல் விசாரணை சட்டம் பிரிவு 156 (3)-ன் கீழ், வழக்கறிஞர் ராகேஷ் நாத் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். இந்தப்பிரிவு வெளிப்படையாக தெரியும் குற்றங்களை விசாரிப்பதற்கு மாவட்ட நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், வழக்கறிஞரின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி நளின் குமார் ஸ்ரீவஸ்தவா இந்த வழக்கில் விளக்கம் கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். வரும் மார்ச் 2-ம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெறவிருக்கிறது.
பிரதமர் மோடி டோக்லாமில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு 2017-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தீபாவளியின் போதும் பிரதமர் ராணுவ சீருடையை அணிந்து வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்.
அந்த வகையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் ஜம்மு - காஷ்மீரின் நவ்ஷேரா மாவட்டத்தில் இந்திய ஆயுதப் படை வீரர்களுடன் ராணுவ சீருடையில் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தன் 20 ஆண்டுகால ஆட்சியில் ஆயுதப் படைகளின் அனைத்து இராணுவச் சீருடைகளையும் அணிந்துள்ளார். அதேபோல, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், துனிசியா அதிபர் நஜ்லா பவுடன், சீனாவின் ஜி ஜின்பிங் எனப் பல தலைவர்கள் ராணுவ உடையில் வீரர்களைச் சந்திப்பது வழக்கம்.
இவர்கள் அனைவருமே நாட்டின் தலைவர்கள்தான். அந்த வகையில் பிரதமர் மோடியும் தீபாவளி தினத்தன்று ராணுவ உடையில் வீரர்களைச் சந்திப்பது வழக்கமான ஒன்று என்று கூறப்படுகிறது.
Also Read: ரூ.1,000 கோடி; 216 அடி உயரம்; 120 கிலோ தங்கம் மோடி திறந்து வைக்கும் சிலை பற்றித் தெரியுமா?
from தேசிய செய்திகள் https://ift.tt/TxFt8OP
0 Comments