மும்பையின் போக்குவரத்து நெரிசல்தான், நகரில் மூன்று சதவிகித விவாகரத்துகளுக்கு காரணமென மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். நகர சாலைகள் மற்றும் போக்குவரத்து நிலைமைகள் குறித்துப் பேசியபோது, சாலைப் போக்குவரத்து குறித்து வேடிக்கையாகப் பகிர்ந்த காணொளி இப்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
Also Read: சினிமா பாணியில் களமிறங்கிய மேற்கு வங்கம்; போக்குவரத்து விதி மீறல்களுக்கு 10 மடங்கு அபராதம் உயர்வு!
சாலைகளிலுள்ள பள்ளங்களாலும் போக்குவரத்து நெரிசலாலும் தனிப்பட்ட முறையில் அவர் சிக்கித் சிரமப்பட்டதைப் பகிர்ந்தவர், ``நான் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி என்பதை மறந்துவிடுங்கள், நான் ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன். போக்குவரத்து நெரிசலும் சாலைகளில் உள்ள பள்ளங்களும், நம்மை எப்படி பாதிக்கின்றன என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்" என்றார்.
அது மட்டும் இல்லாமல் மும்பையின் போக்குவரத்து நெரிசலால் மக்களால் குடும்பத்துடன் போதுமான நேரம் செலவிட முடியாமல் போகிறது. மூன்று சதவிகித விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசலே காரணமெனவும் தெரிவித்துள்ளார். மக்கள் இதை வைத்து ஜோக்குகளையும், மீம்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
Also Read: 10 நாள்களாக போராடிய மும்பை கர்ப்பிணி பெண்; போராட்டத்தின் இடையே நடந்த பிரசவம்!
இந்நிலையில் அவரை கேலி செய்யும் விதமாக எம்.பி பிரியங்கா சதுர்வேதி, ``3% மும்பைவாசிகள் சாலை போக்குவரத்து காரணமாக விவாகரத்து செய்கிறார்கள் என்று கூறிய அந்த பெண்ணுக்கு (அம்ருதாவின் பெயரைக் குறிப்பிடாமல்) இந்த நாளின் சிறந்த (இல்) லாஜிக் விருது வழங்கப்படுகிறது" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/pAgL0kc
0 Comments