ஹிஜாப் விவகாரம்: ``மத சுதந்திரத்தை மீறுவதாக இருக்கிறது!”- அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர தூதர்

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பிய விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையானது. ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் தொடங்கி இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஹிஜாப் விவகாரத்தைத் தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம் எனக் கூறி இதை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறும் என்றும் கூறியிருக்கிறது.

ஹிஜாப் சர்ச்சை

இந்த பிரச்னைக்கு பல்வேறு நாடுகளும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர தூதர் ரஷாத் ஹுசைன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``மத சுதந்திரம் என்பது ஒருவரின் மத உடையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாகும். மதம் சார்ந்த ஆடைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து, கர்நாடக அரசு தீர்மானிக்கக் கூடாது. பள்ளிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டிருப்பது, மத சுதந்திரத்தை மீறுவதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளை களங்கப்படுவதாகவும் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர தூதர் ரஷாத் ஹுசைன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பரில் IRFகான தூதராக நியமிக்கப்பட்டார். அவர் IRF- ன் முதல் முஸ்லீம் தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கர்நாடக அரசு கொடியின் கலர், டிசைனில் பிகினி ஆடைகள் விற்பனை; அமேஸான் கிளப்பிய புதிய சர்ச்சை!



from தேசிய செய்திகள் https://ift.tt/zYgs1mF

Post a Comment

0 Comments