2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதியன்று, நாடாளுமன்றத்தில் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில், பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்து வந்த இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி மதத்தினர் இந்தியாவில் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் தங்கியிருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்காகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. சில இடங்களில் இந்த போராட்டங்களினால் பொதுச் சொத்துக்கள் அதிகளவில் சேதமடைந்தன.
அந்த வகையில், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டங்களில் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தன. சேதமடைந்த பொதுச் சொத்துக்களின் தொகையை மீட்டெடுப்பதாக 236 போரட்டகாரர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு மாவட்ட நிர்வாகம் மீட்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதனைத்தொடர்ந்து, உத்தரப்பிரதேச அரசின் மீட்பு நோட்டீஸ் ரத்து செய்ய வேண்டுமென்று வழக்கறிஞர் பர்வேஸ் ஆரிஃப் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், "மீட்பு நோட்டீஸ் பிப்ரவரி 18-க்குள் உத்தரப்பிரதேச அரசு திரும்பப்பெற வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், "மீட்பு நோட்டீஸ் அனுப்பிய செயல்முறைகள் சட்டத்திற்கு முரணாக உள்ளது. மீட்பு நோட்டீஸ் திரும்பப்பெற இது தான் இறுதி வாய்ப்பு, இல்லையென்றால் உச்ச நீதிமன்றமே ரத்து செய்யும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, "குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உத்தரப்பிரதேச அரசே புகார்தாரர், நீதிபதி மற்றும் வழக்கறிஞர் போல் செயல்படுகிறது" கூறியது குறிப்பிடத்தக்கது.
Also Read: `சாகவேண்டும் என வருபவர்களை என்ன செய்வது?!’ - சர்ச்சையான உ.பி முதல்வரின் பேச்சு #CAA
from தேசிய செய்திகள் https://ift.tt/7uH4EgQ
0 Comments