சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி அதிக அளவில் குற்றங்கள் நடந்து வருகிறது. இதில் அதிக அளவு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மும்பையில் வாலிபர் ஒருவர் தனக்கு தெரிந்த 200 பெண்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மும்பை வடாலா பகுதியில் வசிப்பவர் சுபம் கட்லிங்கா(22). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்லிங்காவிற்கு காதலில் தோல்வி ஏற்பட்டதால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதனால் பெண்களை மோசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் தகவல்களை பதிவேற்றம் செய்து வந்தார். வடாலா அருகில் உள்ள அண்டாப் ஹில் பகுதியை சேர்ந்த சில பெண்களின் புகைப்படங்கள் சமூக வெளியாகி இருந்தது. அதில் அப்பெண்கள் விலை மாதர்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து அப்பெண்களின் தோழிகள் பார்த்து சொன்ன பிறகுதான் அவர்களுக்கே தெரிய வந்தது. இக்காரியத்தை சுபம் கட்லிங்காதான் செய்திருக்கவேண்டும் என்று அப்பெண்கள் கருதினர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்று சுபம் சில பெண்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விலைமாதர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் அப்பெண்களின் பெற்றோர் சுபத்தை பிடித்து அடித்து உதைத்தனர். போலீஸில் புகார் செய்யவேண்டாம் என்று சுபம் பெற்றோர் கேட்டுக்கொண்டதால் விட்டுவிட்டனர். இப்போது மீண்டும் அது போன்று பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு விலைமாதர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது தனது சமூக வலைத்தள பக்கத்தில் தன்னை பின் தொடரும் பெண்கள், தனக்கு தெரிந்த, தன்னுடன் படித்த பெண்களின் புகைப்படங்களை எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விலைமாதர்கள் என்று குறிப்பிடுவார்.
அதோடு அப்படங்களை தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு அனுப்பி விலையும் பேசுவார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுபத்தை கைது செய்தனர். இது தொடர்பாக சீனியர் இன்ஸ்பெக்டர் நாசர் குல்கர்னி கூறுகையில், சுபம் 150 முதல் 200 பெண்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருப்பார் என்று கருதுகிறோம். இப்போது 3 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சுபம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர். அது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/AXp9e5y
0 Comments