மகாராஷ்டிரா மாநிலம் பொய்சர் என்ற இடத்தில் வசிப்பவர் பிரீத்தி பிரசாத் (20). இவர் தனது வாட்ஸ் அப்பில் ஒரு ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். ஆனால், அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 வயது பெண் ஒருவர், பிரீத்தி பிரசாத் தன்னை குறிவைத்துதான் இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதாகக் கருதியிருக்கிறார். தன்னை இழிவுபடுத்தும் வகையில் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதாக அந்தப் பெண் தன் தாயாரிடம் இதுகுறித்து தெரிவித்திருக்கிறார். அதோடு அவர் தன் தாயார், சகோதரி, சகோதரன் ஆகியோரை அழைத்துக்கொண்டு பிரீத்தி பிரசாத் வீட்டுக்குச் சென்று தகராறு செய்திருக்கிறார்.
அதோடு பிரீத்தி மற்றும் வீட்டில் இருந்த அவர் தாயார் லீலாவதி ஆகியோரை அந்தப் பெண்ணின் குடும்பத்தார் தாக்கியிருக்கின்றனர். அதில் லீலாவதி படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். உடனே லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து இளம் பெண், அவர் தாயார் மற்றும் சகோதரன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``இறந்து போன பெண்ணுக்கு ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. இந்த நிலையில், தகராறில் காயம் ஏற்பட்டதில் லீலாவதி இறந்து போனார்" என்று தெரிவித்தார்.
வாட்ஸ் அப் பிரச்னையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/kEizMQL
0 Comments