ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அரூசா என்ற மாணவி பன்னிரெண்டாம் வகுப்பில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மாணவி அரூசா சமூகவலைதளங்களில் ஹிஜாப் அணியாமல் தான் எடுத்தப் புகைப்படங்களை பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஹிஜாப் தொடர்பான விவாதங்கள் அனல் பறந்துக் கொண்டிருக்கும் வேளையில், அரூசா ஹிஜாப் அணியாமல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சில இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் மாணவி அரூசாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகத் தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அரூசா கூறுகையில், ``நான் ஒரு நல்ல முஸ்லிம் என்பதை நிரூபிக்க ஹிஜாப் அணியத்தேவையில்லை. ஒருவர் ஹிஜாப் அணிவதும், அணியாததும் மதத்தின் மீதான நம்பிக்கையை வரையறுக்காது. நான் என்னை விமர்சித்தவர்களை விட அல்லாவை நேசிக்கிறேன். நான் இதயத்தால் ஒரு முஸ்லிம். ஹிஜாப்பால் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
Also Read: ஹிஜாப் விவகாரம்: ``மத சுதந்திரத்தை மீறுவதாக இருக்கிறது!”- அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர தூதர்
from தேசிய செய்திகள் https://ift.tt/q9PzxRf
0 Comments