கர்நாடகா: திறக்கப்பட்ட பள்ளிகள்... இன்று கூடுகிறது சட்டமன்றம்! - கவனம் பெறும் ஹிஜாப் விவகாரம்

கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பாக உருவான சர்ச்சை இந்தியா முழுவதும் எதிரொலித்தது. ஹிஜாப் விவகாரம் ஏதும் அசம்பாவிதமாக மாறிவிடக்கூடாது என்பதற்காகக் கர்நாடக அரசு 3 நாள்கள் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டது. மேலும், இந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் காவல்துறையின் கொடி அணிவகுப்புகள் நடைபெற்றது. மேலும், பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

ஹிஜாப் சர்ச்சை

இது தொடர்பான கூடுதல் பாதுகாப்பு நாடவடிக்கையாக, கர்நாடக சட்டமன்ற உறுப்பினர், ரகுபதி பட் தலைமையில், உடுப்பி மாவட்ட அமைதியை நிலைநாட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்கள் சட்ட ஒழுங்கை கடைப்பிடிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஹிஜாப் சர்ச்சை மற்றும் மேகதாது அணை பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Also Read: விஸ்ரூபமெடுத்த கர்நாடகா ‘ஹிஜாப்’ விவகாரம்... மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் மத அமைப்புகள்!



from தேசிய செய்திகள் https://ift.tt/4rO20YM

Post a Comment

0 Comments