திருமண வரவேற்பில் மயங்கிய மணப்பெண்... மூளைச்சாவு! - உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் சைத்ரா என்ற பெண்ணுக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சைத்ரா, அவருடைய கணவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, அந்தப் பெண் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, பரிசோதனை செய்தனர். அப்போது மருத்துவர்கள் சைத்ரா மூளைச்சாவு அடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் உறவினர்கள் சோகத்தில் கதறி அழுதனர். இந்த நிலையில் மணப்பெண் சைத்ராவின் பெற்றோர், அந்தப் பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க முடிவு செய்தனர். இந்த நிகழ்வைக் குறிப்பிட்டு, அந்த மாநிலத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுதாகர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ``சைத்ராவின் வாழ்க்கையில் இது மிகப்பெரிய நாள். ஆனால் விதி வேறு திட்டங்களைத் தீட்டிவிட்டது. இதயத்தை நொறுக்கும் சோகத்தையும் பொருட்படுத்தாமல், உடல் உறுப்புகளை தானம் செய்ய, அந்தப் பெண்ணின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Also Read: ஹிஜாப்க்கு எதிராக காவி துண்டு... அதிகரிக்கும் எதிர்ப்பு! - என்ன நடக்கிறது கர்நாடகாவில்?



from தேசிய செய்திகள் https://ift.tt/SLm4gNx

Post a Comment

0 Comments