100 கி.மீ வேகத்தில் வந்த ரயில்; சறுக்கிய இருசக்கர வாகனம்! - நொடிப்பொழுதில் உயிர் தப்பிய வாலிபர்

மும்பையில் ரஞ்சித் தேஷ்பாண்டே என்பவர் இரயில் தண்டவாளத்தில் இருந்த லெவல் கிராசிங்கை தனது இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்றார். ரயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் ரயில்வே கேட்டிற்கு அடிப்பகுதி வழியாக ரயில் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தனர். ரஞ்சித்தும் அதே போன்று ரயில் தண்டவாளத்தை தனது இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்றார். அந்நேரம் வெகு அருகில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 100 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இரு சக்கர வாகனத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இரு சக்கர வாகனம் சறுக்கி கீழே விழுந்தது. ரயில் பக்கத்தில்வந்து விட்டது. உடனே உயிர் தப்பினால் போதும் என்று அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இரு சக்கர வாகனம் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் கிடந்தது. வேகமாக வந்த ரயிலின் அதிர்வால் இரு சக்கர வாகனம் ரயிலில் சிக்கி சின்னாபின்னமானது. எப்படியோ உயிர் பிழைத்தோம் என்று நினைத்து இரு சக்கர வாகனத்தின் எஞ்சிய மிஞ்சம் மீதி பகுதிகளை மட்டும் ரஞ்சித் சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து சென்றார். இரு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்திருக்கும்பட்சத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். எனவே ரயில்வே போலீஸார் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் சில நிமிடங்களை சேமிக்க இது போன்று உயிரோடு விளையாடக்கூடாது என அதிகாரிகளும், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தெரிவித்தனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/vlIOEkh

Post a Comment

0 Comments