மும்பை: தாவூத் இப்ராஹிம் சகோதரி வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கப்பிரிவு ரெய்டு!

தேசிய புலனாய்வு முகமை சமீபத்தில் தாவூத் கும்பலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. முக்கிய பிரமுகர்களைத் தாக்கி சமுதாயத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதோடு சமீபத்தில் தாவூத் இப்ராஹிம் செயல்பாடுகள் பஞ்சாப்பில் இருப்பதையும் தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்தது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புடன் சேர்ந்துகொண்டு பஞ்சாப்பில் தீவிரவாதத்தை தாவூத் இப்ராஹிம் பரப்புவதாக தேசிய புலனாய்வு முகமை கருதுகிறது.

இந்த நிலையில், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று காலையிலேயே மும்பையில் தாவூத் இப்ராஹிம் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தினர். இதில் தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்கர் இல்லத்திலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. ஹசீனா வீடு மட்டுமல்லாது மும்பை முழுவதும் 10 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் தாவூத் தனது தொழிலுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கிறானா என்பது குறித்தும், பஞ்சாப்பில் கிடைத்த சில முக்கிய தகவல்கள் குறித்து உறுதி செய்து கொள்வதற்காகவும் இந்த ரெய்டு நடப்பதாக அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹரிபாலாஜி

இந்த ரெய்டு குறித்து மும்பையில் டோங்கிரி பகுதியை உள்ளடக்கிய பகுதியில் துணை கமிஷனராக இருக்கும் ஹரிபாலாஜியிடம் கேட்டதற்கு, ``டோங்கிரியில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

தாவூத் இப்ராஹிம்

மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியது தொடர்பாக தாவூத் இப்ராஹிம் மத்திய அரசால் தேடப்பட்டு வருகிறான். கான்ஸ்டபிள் மகனான தாவூத் இப்ராஹிம் மும்பை டோங்கிரி பகுதியில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு பின்னர் பெரிய ரவுடிகளுடன் மோதும் அளவுக்கு பெரிய ஆளாக மாறி துபாய் தப்பிச்சென்றான். அங்கிருந்து கொண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தினான். தற்போது தனது கூட்டாளிகளுடன் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான்.

Also Read: `இந்தியாவில் ஸ்லீப்பர் செல்கள்?!’ - தாவூத் இப்ராஹிம், சோட்டா சகீல் மீது புதிய வழக்கு பதிந்த என்.ஐ.ஏ



from தேசிய செய்திகள் https://ift.tt/fMg9J4Z

Post a Comment

0 Comments