கேரளாவில் பொங்கல் விடுமுறை: முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை... உத்தரவை மாற்றிய பினராயி அரசு!

கேரளாவில் தமிழ் மொழி அதிகம் பேசும் மக்களைக்கொண்ட ஆறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி உள்ளுர் விடுமுறை என்று கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ``கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14-ம் நாள் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை அறிவித்துவருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14-ம் தேதி தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும். ஆனால் 2022 -ம் ஆண்டில் ஜனவரி 15-ம் நாள் இந்த ஆறு மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ஜனவரி 14-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக பொங்கல் விடுமுறை அளிக்க வேண்டும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பினராயி விஜயன்

இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு, முன்னதாக ஜனவரி 15-ம் தேதி விடுமுறை என்று அறிவித்திருந்ததை மாற்றி உடனடியாக, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையில் குறிப்பிட்டிருந்த ஆறு மாவட்டங்களுக்கு, நாளை, அதாவது ஜனவரி 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவில் விடுமுறை தினத்துக்கான மாற்றுப் பணி நாளாக அடுத்து வரும் சனிக்கிழமை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: பொங்கல் பொருள்: `புளியில் பல்லி; தந்தைமீது புகார்!' - மன உளைச்சலில் மகன் தீக்குளித்துத் தற்கொலை?!



from தேசிய செய்திகள் https://ift.tt/3GwTxG4

Post a Comment

0 Comments