உ.பி: உன்னாவ் சிறுமியின் தாய்; தாக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்! - கவனம்பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள்

உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தலை நடந்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பான அரசியல் நகர்வுகள் அரங்கேறிவரும் நிலையில், பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச சட்டமன்ற வேட்பாளர்களில், முதற்கட்டமாக 125 வேட்பாளர்கள் பெயர்கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத் தேர்தலில் 40 சதவிகித சீட்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 125 வேட்பாளர்களில் 40 சதவிகிதம் பெண்களுக்கும், மீதமுள்ள வேட்பாளர்களில் 40 சதவிகிதம் இளைஞர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உ.பி தேர்தல்

இவர்களில், அகில இந்திய அளவில் கவனம்பெற்ற வேட்பாளர்களாக சில வேட்பாளர்கள் களம் இறக்கப்படுகின்றனர். அவர்களில் 2017-ம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏ ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் சிறுமியின் தாய் ஆஷா சிங், உன்னாவ் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் கடந்த நவம்பர் மாதம் ஷாஜஹான்பூரில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்திக்கச் சென்று காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியரான பூனம் பாண்டே என்பவருக்கும், உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்திலுள்ள உம்பா கிராமத்தில் நிலம் தொடர்பான கோண்ட் பழங்குடியினரின் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த ராம்ராஜ் கோண்ட் என்பவருக்கும், CAA எதிர்ப்பு போராட்டத்தால் சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சதாப் ஜாஃபர் என்பவருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சதாப் ஜாஃபர்

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிரியங்கா காந்தி, ``மொத்தமுள்ள 125 வேட்பாளர்களில் 40 சதவிகிததம் பேர் பெண்கள் மற்றும் 40 சதவிகிதம் பேர் இளைஞர்கள். மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருவதைக் கருத்தில்கொண்டு பாலின சமத்துவத்தில் கவனம் செலுத்தி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். நீங்கள் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியிருந்தால், காங்கிரஸ் உங்களுக்கு ஆதரவளிக்கும் என்பதற்குச் சான்றே இந்தப் பட்டியல். இந்த வரலாற்று முயற்சியின் மூலம், மாநிலத்தில் ஒரு புதிய அரசியலைக் கொண்டுவருவோம் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: டெல்லி: `மத்திய அரசு ஆராய வேண்டும்; போராட்டத்தால் பிரச்னைகள் தீராது!’ - உச்ச நீதிமன்றம் கருத்து



from தேசிய செய்திகள் https://ift.tt/3qmD3u9

Post a Comment

0 Comments