ஆந்திரா: `ஒரு மாவட்டம்... ஒரு விமான நிலையம்’ - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி!

ஆந்திராவில், `மாவட்டத்துக்கு ஒரு விமான நிலையம்!' என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் விமான நிலையம் அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டிருக்கிறது.

கடந்த 2019-ல் ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆந்திராவின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு வகையான புதிய திட்டங்களை அந்த மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஒரு மாவட்டத்துக்கு ஒரு விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கான பணிகளில் அதிகாரிகளைத் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும், விமான நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரான முறையில் மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று நேற்று நடைபெற்றக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் மொத்தமாக 13 மாவட்டங்கள் இருக்கின்றன. அதில் தற்போது 6 மாவட்டங்களான விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி, கர்னூல் மற்றும் ராஜமகேந்திரவரம், கடப்பா ஆகிய பகுதிகளில் மட்டும் விமான நிலையங்கள் இருக்கின்றன. மீதமுள்ள மாவட்டங்களில் விமான நிலையம் இல்லாத காரணத்தினால் அங்கு விமான நிலையம் தொடங்க உள்ளதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி

மேலும், ஐந்து மீன்பிடி துறைமுகங்களுக்கான டெண்டர் விரைவில் இறுதி செய்யப்படும் வேண்டும், ஆந்திராவில் அமையவுள்ள விமான நிலையங்கள் அனைத்தும் ஒரே மாதிரி அளவுடையதாகவும், பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்கிறார்.

Also Read: ஜெகன் மோகன் ரெட்டி... தடம் மாறும் தவப்புதல்வன்!



from தேசிய செய்திகள் https://ift.tt/3GOxo67

Post a Comment

0 Comments