உ.பி: ``காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை உறுதி!" - ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கூட்டாக வெளியிட்டனர். உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல், 7 கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 40 சதவிகிதம் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ராகுல் காந்தி

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் அரசு வேலைகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு செய்யப்படும். காவல் துறையில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஆரம்பப் பள்ளிகளில் 1.5 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு ராகுல் காந்தி பேசும்போது, இந்தத் தேர்தல் அறிக்கை வெறும் வெற்று வார்த்தைகளாக இருக்காது. இந்தியாவுக்கான தொலை நோக்கு பார்வையாக இருக்கப் போகிறது. இந்தியாவின் தொலைநோக்கு பார்வை உத்தரப்பிரதேசத்திலிருந்து தொடங்க இருப்பதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 8 லட்சம் பெண்களுக்கும், 20 லட்சம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இளைஞர்களின் வலிமையில், புதிய உத்தரப்பிரதேசத்தைக் கட்டமைக்கப் போவதாகவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டுத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். ``உத்தரப்பிரதேச அரசின் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியில் மட்டும் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருகிறது" என்றார்.

Also Read: “பிரசவ வேதனையை அனுபவிக்கிறது காங்கிரஸ்!”



from தேசிய செய்திகள் https://ift.tt/3IneaF5

Post a Comment

0 Comments