உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 403 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அவருக்கு போட்டியாக அகிலேஷ் யாதவ் களமிறங்கியுள்ளார். தற்போது பா.ஜ.க-வை எதிர்த்து உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ள அகிலேஷ் யாதவை ஆதரித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க-விலிருந்து மூன்று அமைச்சர்கள் மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் பா.ஜ.க மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 403 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், அப்னா தளம் மற்றும் நிஷாத் ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாகவும் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.
Also Read: உத்தரபிரதேசம்.: அமித் ஷா, ஆஸம் கான் பிரசாரம் செய்ய தடை!
from தேசிய செய்திகள் https://ift.tt/3KsJfc4
0 Comments