மும்பையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மும்பை போலீஸார் நகர் முழுவதும் 91 `நிர்பயா போலீஸ் குழுக்களை' தொடங்கியுள்ளனர். அவர்களுக்காக பிரத்யேக வாகனமும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்பயா குழுக்கள், பெண்களின் பிரச்னைகளை தீர்க்க 24 மணி நேரமும் போலீஸ் நிலையத்தில் இருப்பார்கள். ஒவ்வொரு குழுவிலும் பயிற்சி பெற்ற ஆண் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்று இருப்பார்கள்.
Also Read: தஞ்சை மாணவி தற்கொலை: இந்த மதத்திணிப்பை எப்போது நாம் கேள்வி கேட்கப்போகிறோம்? #VoiceOfAval
இந்த நிர்பயா குழுக்களை முதல்வர் உத்தவ் தாக்கரேயும், மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீலும் சேர்ந்து தொடங்கி வைத்தனர். நகரில், ஈவ் டீஸிங் முதல் பாலியல் துன்புறுத்தல் வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக இந்த போலீஸ் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ``எந்த வகையிலும் பாதிக்கப்படும் பெண்கள் 103 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தால் அவர்களுக்கு உதவி தேடி வரும்" என்று தெரிவித்திருந்தார்.
Also Read: பெண்களுக்கு கட்டணமில்லா `பிங்க்' பேருந்து, `பிங்க் லைசன்ஸ் டே' - புதுச்சேரி அரசின் புது முயற்சி!
நிகழ்வில் ஆன்லைனில் இணைந்த முதல்வர் உத்தவ்தாக்கரே `நிர்பயா குழுக்கள்' குறித்து, ``இந்தியாவில் பெண்களை பாதுகாக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருப்பதை அரசு உறுதி செய்யும். மகாராஷ்டிரா அரசு எப்போதும் பெண்களை தெய்வமாக வணங்குகிறது. பெண்களுக்கு மரியாதை கொடுத்து வருகிறது. மும்பையில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பணிபுரிவதை நிர்பயா குழுக்கள் உறுதி செய்யும்" என்று தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அரசுத் திட்டங்கள் செயல்களிலும் வெற்றிபெறட்டும்!
from தேசிய செய்திகள் https://ift.tt/35iikzE
0 Comments