கர்நாடக மாநிலம், பதாமியில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த கர்நாடக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பேசியுள்ளார். மேலும் அவர், ``பாஜக எப்போதும் ஒழுக்கத்தை கடைபிடிக்கின்ற கட்சி என்று அக்கட்சியினர் கூறுவார்கள், ஆனால் உண்மையில் அங்கு அப்படியொன்றும் இல்லை. பசவராஜ் பொம்மை ஆட்சியில் அமைச்சர் பதவிக்கான போட்டிகள் தான் பாஜக-வில் நடந்து கொண்டிருக்கின்றன. தவிர மாநில வளர்ச்சிக்கான பணிகள் ஏதும் நடைபெறுவதில்லை, அதுகுறித்த எண்ணமும் அவர்களுக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், ``தற்போது கூட பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தன்னுடன் தொடர்பில் தான் இருக்கின்றனர், அவர்களின் பெயர்களை கூற விரும்பவில்லை, அதேபோல் அவர்கள் எப்போது காங்கிரஸில் சேருவார்கள் என்பதையும் இப்போது கூறமுடியாது” என்று சித்தராமையா பேட்டியில் கூறினார். இதையடுத்து கர்நாடகாவில் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சித்தராமையா, ``அடுத்தாண்டு தேர்தலில் எந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று தெரியவில்லை, கட்சி மேலிடம் எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன்” என்று கூறி முடித்தார்.
Also Read: கருணாநிதிக்கு பரிசு; ஜெயலலிதாவுடன் கன்னட உரையாடல்; 13 ஆண்டுகளில் முதல்வர் -யார் இந்த பசவராஜ் பொம்மை?
from தேசிய செய்திகள் https://ift.tt/3G6Kbzs
0 Comments