
பிரபல இடையீட்டு இதய மருத்துவ சிகிச்சை நிபுணர் கே.ஏ.ஆப்ரஹாம் சென்னையில் காலமானார்.
பிரபல இடையீட்டு இதய மருத்துவ சிகிச்சை நிபுணர் கே.ஏ.ஆப்ரஹாம் (வயது 79). இதய மருத்துவ சிகிச்சையில் 50 ஆண்டுகள் நிபுணத்துவம் பெற்று விளங்கிய அவர், நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். இவர் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தார். குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்டி, லண்டனில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளை படித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments