
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் மற்றும் 28 மாவட் டங்களில் காலியாக உள்ள 130 பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந் தது. மொத்தம் 73.27 சதவீத வாக்கு கள் பதிவாயின. 12-ம் தேதி 74 மையங்களில் வாக்கு எண் ணிக்கை நடைபெறுகிறது. மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு களுடன் கண்காணிப்பும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவி களுக்கான இடைத்தேர்தல் ஆகிய வற்றை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. மொத்தம் 27 ஆயிரத்து 791 பதவிகளை நிரப்ப இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Fuj969
0 Comments