
தமிழக அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 11 வயது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பேரனுக்காக தனது ஒரு சிறுநீரகத்தை பாட்டி தானம் கொடுத்துள்ளார்.
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரை சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி. இவர்களின் மூத்த மகன் அக்‌ஷயராஜ் (வயது 11). 2013-ம் ஆண்டு நாள்பட்ட சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாத்திரை, மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. 2019-ம் ஆண்டில் திடீரென்று சிறுநீரகங்கள் செயலிழந்ததால் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு சிறுவன் சென்றான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments