
தாம்பரம் அருகே உள்ள, தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கர் இடத்தை வருவாய்த் துறையிடம் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 4 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள், வீடுகள், கடைகள் உள்ளன. இவை வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த சூழலில், கோயில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3knME13
0 Comments