தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை.
இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது.
இந்நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
"தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற சவாலில் வெற்றி பெற வேண்டும். தேமுதிகவின் இருண்ட காலம் சென்றுவிட்டது, இனி பிரகாசம்தான் .
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளன. ஆனால், தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கூட்டணியைத்தான் நாங்கள் அமைப்போம். தேமுதிக தொண்டர்களை அரசாங்க பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை" என்று பேசியிருக்கிறார்.
from India News https://ift.tt/bMkwYBc
0 Comments