கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வில் கமல்ஹாசன் நேற்றைய தினம் பங்கேற்றிருக்கிறார்.
அதில் பல்வேறு கேள்விகள் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் கேட்கப்பட்டது. குறிப்பாக, 'ஒரு சீனியராக விஜய்க்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
Kamal Haasan: "இன்னும் நான் அந்த நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்" - ஓய்வு குறித்து கமல் ஹாசன்
அதற்கு கமல், "நான் அறிவுரை கூறும் இடத்தில் இல்லை. சரியான நேரத்தில் எனக்கு அறிவுரை கிடைக்காததால் நான் அறிவுரைகளை ஏற்றுக் கொள்வதேயில்லை. என் தம்பி விஜய்க்கு அறிவுரை கூற இது சரியான நேரமில்லை என்று நினைக்கிறேன்.
'யவருடைய அறிவுரையைவிடவும் அனுபவமே சிறந்த ஆசான்' என்பேன் நான். அனுபவம் சொல்லித்தரும் அனைத்தையும்.
கேள்வி: விஜய் தவெக என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் எதிரி (திமுக, பாஜக) யார் என்று அடையாளம் கண்டுவிட்டார். கமல் அரசியலில் தனது எதிரியை இன்னும் அடையாளம் காணவில்லையா?
கமல்: தனிப்பட்ட வகையில் யாரும் எனக்கு எதிரிகள் அல்ல. என்னுடைய எதிரி மிகப்பெரியது. இங்கு இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்க்க தைரியமில்லாமல் பயப்படும் எதிரிதான் என்னுடைய எதிரி. அது சாதிதான். சாதிதான் என்னுடைய எதிரி. அந்த சாதியம் என்னும் எதிரியைக் கொன்றுவிடுவதுதான் என்னுடைய லட்சியம்.
ஏன் கொன்றுவிடுவேன் என்று வன்முறையாகச் சூளுரைக்கிறேன் என்றால், சாதியம் அவ்வளவு வன்முறையானது, கொடுமையான வன்முறைகளை இன்னுமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அதைக் கொன்றுவிடவேண்டும் என்று லட்சியம் கொண்டுள்ளேன். அதுதான் என்னுடைய எதிரி, மிகப்பெரிய எதிரி" என்று பேசியிருக்கிறார் கமல்.
from India News https://ift.tt/IaKvCrP
0 Comments