இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம் ஆகிய பிரிவுகளில் மூன்று தனித்தனி வழக்குகள் நடந்து வருகின்றன.
ட்ரம்ப் கடிதம்
இந்த வழக்குகளுக்கான விசாரணை 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலை பொறுத்தவரை, ஆட்சியில் இருக்கும் பிரதமர் வழக்குகளை சந்திப்பது இதுவே முதல்முறை.
இந்த வழக்குகளில் நெதன்யாகுவிற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகு மன்னிப்பு
இந்த நிலையில், நெதன்யாகுவே தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஐசக் ஹெர்சாக்கிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளார். இதை நெதன்யாகுவின் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
ஐசக் ஹெர்சாக் என்ன சொல்கிறார்?
இந்தக் கடிதம் குறித்து ஐசக் ஹெர்சாக்கின் அலுவலகம் கூறியுள்ளதாவது...
"இந்தக் கடிதம் அசாதாரணமானது மற்றும் மிக முக்கியமானது. இது குறித்த அனைத்து தகவல்கள் மற்றும் அனைவரின் கருத்துகளைப் பெற்றப்பின், அதிபர் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பார்" என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் அதிபரின் பதிலை பொறுத்தே நெதன்யாகுவின் அடுத்தடுத்து அரசியல் பக்கம் அமையும்.
from India News https://ift.tt/TigSCUe
0 Comments