மபி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவு பரிமாறிய அவலம்; ராகுல் காந்தி கண்டனம் |வீடியோ

மத்திய பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு பரிமாறப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில்...

"நான் இன்று மத்தியப் பிரதேசத்திற்குச் செல்கிறேன்.

பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு செய்தித்தாள்களில் பரிமாறப்பட்ட செய்தியைப் பார்த்த போதிலிருந்து என் இதயம் உடைந்துவிட்டது.

இந்த அப்பாவி குழந்தைகளின் கனவுகளில்தான் நம்முடைய நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு ஒரு தட்டு கண்ணியம் கூட கிடைக்கவில்லை.

நியூஸ் பேப்பரில் மதிய உணவு
நியூஸ் பேப்பரில் மதிய உணவு

20 ஆண்டுகால பாஜக ஆட்சியில், அவர்கள் குழந்தைகளின் தட்டைக் கூடத் திருடியிருக்கின்றனர். 'வளர்ச்சி' என்பது வெறும் மாயை. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான உண்மையான ரகசியம் 'சிஸ்டம்'.

இந்தியாவின் எதிர்காலங்களுக்கு, இப்படியான பரிதாபகரமான நிலையில், உணவு பரிமாறுவது குறித்து இத்தகைய முதலமைச்சரும், பிரதமரும் வெட்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த உங்களுடைய கருத்துகளை கமெண்ட் செய்யுங்க மக்களே..



from India News https://ift.tt/BNrnxWY

Post a Comment

0 Comments