தவெக: பிள்ளையார்பட்டி கோயிலில் என். ஆனந்த்; கரூர் வழக்கு ஆவணங்களை வைத்து சிறப்பு வழிபாடு

கரூர் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த பேரிடர் சம்பவத்தை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பிள்ளையார்பட்டி கோயிலில் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த்
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த்

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. வேண்டுதல் தலமான இங்கு வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

இந்த நிலையில்தான் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் குடும்பத்தினருடன் வந்து சிறப்பு வழிபாடு செய்தார். திருச்சியிலிருந்து கார் மூலம் நேற்று மாலை பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலுக்கு வந்தவர், கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டவர், பின்பு வழக்கு ஆவணங்களை வைத்து வழிபட்டார்.

கரூர் கூட்ட நெரிசல் மரணம் குறித்து சிபிஐ தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், அந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



from India News https://ift.tt/rBgy81p

Post a Comment

0 Comments