தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம்! - யார் இவர்?

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு, கால்நடைதுறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம், அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அர்ச்சனா பட்நாயக் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

அர்ச்சனா பட்நாயக்

2002 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகரியாக தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்தார். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றியிருக்கிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையும் இவர் பெற்றிருக்கிறார்.

தற்போது தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளர் ஆக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

அர்ச்சனா பட்நாயக்தான் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக 2026 சட்டசபை தேர்தலை நடத்த போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb



from India News https://ift.tt/kH5h6cE

Post a Comment

0 Comments