தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் நடிகர் அஜித் குமாருக்கு கார் ரேஸ் பந்தயத்தில் தீவிர ஆர்வமுடையவர். கடந்த 2004-ம் ஆண்டு F3 கார்பந்தயத்திலும், 2010-ம் ஆண்டு பார்முலா 2 கார்பந்தயத்திலும் அஜித் குமார் பங்கேற்றார். மேலும், 'அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் தனியாக ஒரு அணியை நிர்வகித்து, இந்த அணி சார்பில் Fabian Duffieuxwill-ஐ அதிகாரப்பூர்வ ஓட்டுநராகவும் நடிகர் அஜித் குமார் அறிவித்தார். இதற்கிடையில், நெதர்லாந்தைச் சேர்ந்த ரேஸ் வீரர்களுக்கான ஆடை தயாரிக்கும் நிறுவன அதிகாரிகளுடன் அஜித் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போதே அஜித் குமார் கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும்விதமாக துபாயில் நடைபெறவிருக்கும் ஜி.டி.3 கோப்பை கார் பந்தயப் போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியானது. அப்படியானால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்தப் பந்தயத்துக்கான பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை நடிகையும் அவருடைய மனைவியுமான ஷாலினி வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
அதைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமாருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை உலகளவில் செல்கிறது. இதற்காக நடிகர் அஜித் குமாருக்கு ஸ்பெஷல் நன்றி" என வாழ்த்தியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from India News https://ift.tt/hG6PsMW
0 Comments