அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் Michelin Dubai 24H 2025 என்ற கார் பந்தயத் தொடரிலும், European 24 H series championship என்ற கார் பந்தயத் தொடரிலும் நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.
'Ajith Kumar Racing' என்ற அணியின் சார்பில்தான் இந்த பந்தயங்களில் அவர் கலந்துகொள்ளப்போகிறார். அஜித்தின் அணியில் பேபியன் என்கிற GT4 Champion பட்டத்தை வென்றவரும், மேத்யூ டெட்ரி என்கிற GT3 பட்டத்தை வென்றவரும், கேம் மெக்லாட் என்கிற F4 British சாம்பியன் பட்டத்தை வென்றவரும் இடம்பிடித்திருக்கின்றனர்.
நோயல் தாம்சன் என்கிற மோட்டோ ஸ்போர்ட்ஸில் பெரும் அனுபவமிக்க நபர் அஜித் அணியின் மேனேஜராக செயல்படவிருக்கிறார். இதற்காக ரேஸ் ட்ராக்கில் டெஸ்ட் ட்ரைவிங்கில் இறங்கியிருக்கிறார் அஜித். அதுதொடர்பான சில புகைப்படங்களும், காணொலிகளும் இப்போது வெளியாகி வருகிறது.
first look posters thothurum pic.twitter.com/nAWHgJ0dGC
— T H A N G A M (@thangamOG2) October 29, 2024
பிரபலங்கள் பலரும் ரேஸில் களமிறங்கும் அஜித்திற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் தமிழ்நாடு துணை முதல்வரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவரது 'எக்ஸ்' வலைத்தளப் பதிவில், “உலக அளவில் சிறப்புக்குரிய "24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class" கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு. அஜித் குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை லோகோவை 'அஜித்குமார் ரேசிங்' யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Best wishes to actor and friend #Ajithkumar Sir as he competes in the prestigious 24H Dubai 2025 and the European 24H Series Championship in the Porsche 992 GT3 Cup class.
— Udhay (@Udhaystalin) October 29, 2024
We're happy that the Sports Development Authority of Tamil Nadu's logo will be proudly displayed on the car… pic.twitter.com/xaYszz2k9J
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார் பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்" என்று தெரிவித்துள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
from India News https://ift.tt/ZaIQvLR
0 Comments