``இதுவும் மாநில உரிமைக்கான போராட்டம்தான்..!" - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின், ``விடுதலை நாள் என்பது அரசியல் விடுதலை நாள் என்பது மட்டுமல்ல. பண்பாட்டு விழாவாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள்மட்டுமல்ல. ஆனந்தமான இந்தியாவை அடுத்தடுத்த ஆண்டுகளில் உருவாக்க திட்டமிடும் நாள். விடுதலை நாளில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலில் 1974-ம் ஆண்டு பெற்று தந்தவர் நமது முன்னாள் முதல்வர் கலைஞர். இதுவும் ஒரு விடுதலைப் போராட்டம் தான். மாநிலங்களுக்கு அதிக உரிமை வேண்டும் என நடந்த போராட்டம்.” என்றார்,
``ஒருவண்ணமல்ல நமது தேசிய கொடி” - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ``வெளிநாடுகளின் உதவியையும் பெற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை நடத்தியபோது, அவருடன் கரம் கோர்த்தவர்கள் தமிழ்நாட்டு வீரர்கள். விடுதலை அடைய கால நிர்ணயம் இல்லை எனத் தெரிந்தும், உயிரையும் இழந்தவர்கள் வாழ்ந்த மண் இந்த தமிழ் மண். அறவழியில் எதிரியை பணியவைத்த காந்தியடிகள் பின்னால் முழு மனதுடன் இந்தியா அணி வகுந்தது. அதில் தமிழ்நாடு முழுமையாக கைகோர்த்து நின்றது.
சத்தியப் பாதையில் எத்தனை சோதனைகள் வந்தாலும், அதற்காக அணிவகுத்து நின்றவர்கள் தமிழ்நாட்டின் தியாகிகள். இவர்களின் தியாகத்தால்தான் விடுதலை காற்றை சுவைத்தோம். நமக்கான நாடு நமதே என்பதை உணர்ந்தோம். 77 ஆண்டுகளை கடந்துவிட்டது விடுதலை இந்தியா. தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி வளர்த்து வருகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை, ஒருமைபாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி இவற்றின் ஒன்றுபட்ட வலிமையே நாட்டின் வலிமையாக உலகுக்கு காட்டி வருகிறோம். ஒருவண்ணமல்ல நமது தேசிய கொடி. அது மூவண்ணக் கொடி. நமது பன்முகத் தன்மையின் அடையாளம் இந்த கொடி.” என்றார்.
'தாயின் மணிக்கொடிப் பாரீர்..." - தேசியக் கொடியை ஏற்றி உரையை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிவைத்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ``தாயின் மணிக்கொடிப் பாரீர் என்ற பாடலை பாடும் தகுதியை தந்த இந்திய விடுதலை வீரர்களை வணங்கி உரையை தொடர்கிறேன். நாட்டு மக்களுக்கு விடுதலை நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விடுதலை பெற்று தந்த வீரர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் போற்றுவோம். அவர்கள் எந்த நோக்கத்துக்காக போராடி சுதந்திரம் பெற்று தந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேற இந்த நாளில் உறுதிஏற்போம். இந்த விடுதலை 300 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு கிடைத்தது." என்றார்.
ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின்
இந்திய தேசத்தின் 78-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி உரையாற்றுகிறார். முதல்வர் ஸ்டாலின் தேசியக்கோடி ஏற்றியதும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது.
சென்னை சுதந்திரதின விழா! நேரலை
கோட்டைக் கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவில் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4-வது ஆண்டாக தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். கோட்டைக் கொத்தளத்துக்கு வரும்முன் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் முதல்வர், காலை 8 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றுகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/uaLmsCw
0 Comments