ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள RG கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான முதுகலை பயிற்சி பெண் மருத்துவர், தனது பணி நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவத் துறை ஊழியர்களும், மருத்துவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகள், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர், முதல்வர் மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், 2012 -ம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய வழக்குகளில் ஒன்று நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நிர்பயாவின் தயார் ஆஷா தேவி, தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ``குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மம்தா பானர்ஜி போராட்டங்களை நடத்தி பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்.
அவரும் ஒரு பெண்தானே... மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் சூழ்நிலையை சரியாக கையாளவில்லை. எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, நீதிமன்றத்தின் மூலம் விரைவான தண்டனை வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டும் வரை, இது போன்ற கொடூரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தினமும் நடந்து கொண்டே இருக்கும்.
கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பாக இல்லாததும், அவர்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தன கொடூரங்கள் நடத்தப்படும்போதும், நாட்டில் பெண்களின் பாதுகாப்பு நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/rf3TYl4
0 Comments