உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. ஜூன் 4 - ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த மாவட்டங்களில் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைத்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு டன் பாதுகாத்து வருகின்றனர்.
வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்யும் முயற்சியாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஊட்டி நகரின் முக்கிய இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஃபிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவு நிறைவடைந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் பேனர்கள் அகற்றப்படாமல் உள்ள நிலையில், வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தெரிவித்த உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன்," ஓட்டுப்போட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திற்காக தான் இந்த பேனர்களை தேர்தல் ஆணையம் மூலம் அமைக்கப்பட்டது. வாக்குப்பதிவு நடைபெற்றது இத்தனை நாட்களாக ஏன் அகற்றப்படவில்லை என்பது எங்களுக்கு புரியவில்லை. ஃபிளக்ஸ் பேனர்களால் பல இடங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது.
ஊட்டி நகரில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களால் எதிரில் வாகனங்கள் தெளிவாக பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது.
நீலகிரியில் ஃபிளக்ஸ் பேனர் அமைக்க தடை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ள இந்த பேனர்களை தேர்தல் அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். மேலும் ஊட்டியில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. இது போன்ற பேனர்கள் விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது. இதனால் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருணாவை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்தோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.! தகுந்த நேரத்தில் பேனர்கள் அகற்றப்பட்டால் சரிதான்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/kgiFlD5
0 Comments