தேர்தல் முடிவுகளுக்கு பின்பு தலைமை மாற்றமா என்பது குறித்த கேள்விக்கு "அதற்கு கிஞ்சிற்றும் இடமில்லை" என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.
சமீபகாலமாக அதிமுக-வுக்குள் தலைமைக்கு எதிராக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், எந்த கருத்தும் சொல்லாமல் இருந்துவந்த மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான ராஜன் செல்லப்பா தற்போது அது குறித்து பேசியுள்ளார்.
மதுரை ஆனையூரில் நடந்த அரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவில் கலந்துகொண்டவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாடாளுமன்ற தேர்தல் வெற்றி அச்சாரமாக விளங்கும்" என்றார்.
"தேர்தல் முடிவுகளுக்கு பின்பு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும் என்று திமுகவினர் கூறுகிறார்களே..." என்ற கேள்விக்கு "அதற்கு கிஞ்சிற்றும் இடமில்லை" என்றவர்,
"எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைமையாக செயல்பட்டு வருகிறார். அதிமுக-வை கட்டிக் காக்கின்ற பெரும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார்.
இரட்டை இலை, தலைமைக் கழகம், இரண்டரைக் கோடி தொண்டர்களுக்கு ஒரே தலைமையாக செயலாற்றி வரும் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ராஜதந்திரியாக பணியாற்றி வருகிறார்.
மற்றவர்களைப்போல அல்லாமல் அதிமுகவை காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி தன்னை ஒப்படைத்துக்கொண்டுள்ளார், ஜெயலலிதாவைப் போல அதிமுகவை காக்க பணியாற்றி வருகிறார்,
அதிமுகவில் தலைமை மாற்றம் என ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை. நாடாளுமன்றத் தேர்தலுக்காக அல்ல, அதிமுக-வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் வேண்டுமானாலும் பதவி கொடுப்பதற்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது, அதிமுக-வில் தகுதி அறிந்து திறமை அறிந்து பதவி கொடுக்கக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி" என கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/dEGbNLW
0 Comments