மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி நாடு முழுதும் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலின் போது இன்னர் மணிப்பூர் தொகுதிக்கு முழுமையாகவும், அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் குறிப்பிட்ட இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் பல்வேறு வாக்குப்பதிவு மையங்களில் வன்முறை நடந்தது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன.
#WATCH | Manipur: A voter shows her inked finger after casting her vote at a polling station in Moirangkampu Sajeb of Imphal East.
— ANI (@ANI) April 22, 2024
Re-polling in 11 polling stations of I-Inner Manipur Parliamentary constituency being held today. #LokSabhaElections2024 pic.twitter.com/riruesP1nk
இதனை தொடர்ந்து மறுவாக்குப்பதிவுக்கான கோரிக்கை வலுவாக எழுந்தது. இந்நிலையில் 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை முதல் கூடுதல் பாதுகப்புடன் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/7k2VlAO
0 Comments