"திராவிட இயக்கம்தான் ஏழை எளிய மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது..." என்று பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து வடமாநிலத்தவரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "25 ஆயிரம் வட இந்தியர் குடும்பத்தினர் மதுரையில் வாழ்கின்றனர். அதிமுக ஆட்சியில்தான் வட இந்தியர்கள் நிம்மதியாக தொழில் செய்தோம் என்றனர். மத்தியில் மோடிஜி வந்தாலும் தமிழ்நாட்டில் அதிமுகதான் வர வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தார்கள்.
மொழியாலும், கலாசாரத்தாலும் தமிழர்கள் தனித்துவம் பெற்றவர்கள் என்பதால் தமிழ்நாடு என்று அண்ணா, பெயர் வைத்தார். அமித் ஷா எதையாவது பேச வேண்டும் என்று பேசியுள்ளார். திராவிட இயக்கம்தான் ஏழை எளிய மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து வாங்கும் நிதியில்தான் பிற மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதைக்காட்டிலும் ஊழல் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிதான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி. அதிமுக ஆட்சியை யாரும் குற்றம் சொல்லவில்லை.
ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கங்களை பற்றி அண்ணாமலையின் மறுபிறவி போல அமித் ஷா பேசுகிறார். தேர்தலுக்காக அமித் ஷா அப்படி சொல்லுகிறார். அவர் உண்மையாக எங்களைப்பற்றி குறை சொல்லவில்லை. திமுக-வைதான் சொல்லவேண்டும், ஆனால் மாற்றி சொல்லி விட்டார்.
அதிமுக அழிந்துபோய் விடும் என்று சொல்லும் அண்ணாமலை என்ன, விஸ்வாமித்திரரா?
அண்னாமலைக்கு அரசியலே தெரியாது. அதிமுக பீனிக்ஸ் பறவை போன்றது. எத்தனையோ பேரை பார்த்து பல சோதனைகளை கடந்து வந்துள்ளது. அண்ணாமலையின் பேச்சு வேடிக்கையானது, அவர் நகைச்சுவையாளராக மாறிவிட்டார்.
அண்ணாமலைக்கு தோல்வி பயம். அதனால் இதுபோன்று பேசி பார்க்கிறார். இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி பேசுவார்? அண்ணாமலை ஒன்றும் சூப்பர் ஸ்டார் கிடையாது. எத்தனை மலை வந்தாலும் சரி அதிமுக-வை ஒன்றும் பண்ண முடியாது. இந்த அண்ணாமலை ஜுஜுபி.
பலமுறை அண்ணாமலையை கிழிகிழினு கிழித்துவிட்டேன். ரோட் ஷோ என்று பிரதமரை அழைத்து வந்து அண்ணாமலை பிரதமரின் செல்வாக்கை ஒன்னுமில்லாமல் ஆக்கி விட்டார்" என்றார்.
from India News https://ift.tt/IwvV5y1
0 Comments