வளைகுடாவில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருகிறது. எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அபாயம் இருந்து வருகிறது. இதையடுத்து இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க போர்க்கப்பல்கள் வளைகுடா பகுதிக்கு விரைந்துள்ளது. வளைகுடா பகுதியில் வரும் சந்தேகத்திற்குறிய கப்பல்கள் மீதும் சமீப காலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று எம்.எஸ்.சி.ஏரிஸ் என்ற கண்டெய்னர் கப்பல் ஓமன் வளைகுடா அருகே சென்ற போது ஈரான் கடற்படையினர் கப்பலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஈரான் கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கினர்.
அவர்கள் கப்பலை ஈரான் நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். அக்கப்பல் இத்தாலி மற்றும் ஸ்விஸ் நாட்டு நிறுவனமான எம்.எஸ்.சி. நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். கப்பலில் 17 இந்தியர்கள் உட்பட 25 பேர் இருந்ததாக அக்கப்பல் கம்பெனி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை பத்திரமாக மீட்க இந்திய அரசு தூதரகம் வாயிலாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கப்பலை ஈரான் கடற்படை தனது கட்டுப்பாட்டில் எடுத்து இருப்பதை எம்.எஸ்.சி.கம்பெனியும் உறுதிபடுத்தி இருக்கிறது.
ஹெலிபோர்ன் ஆபரேசன் என்ற பெயரில் இந்த கப்பலை ஈரான் கைப்பற்றி இருக்கிறது. கப்பலை எம்.எஸ்.சி.நிறுவனம் பயன்படுத்தி வந்தாலும் அக்கப்பல் இஸ்ரேலில் கோர்டெல் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். எனவேதான் அக்கப்பலை ஈரான் பிடித்துச்சென்றுள்ளது. கப்பலை உடனே விடுவிக்கும்படி அமெரிக்கா தெரிவித்துள்ளது. கப்பலையையும் சர்வதேச மாலுமிகளையும் உடனே விடுவிக்கவேண்டும் என்றும், சரக்கு கப்பலை பிடிப்பது சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகும் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித்தொடர்பாளர் வாட்ஸ்சன் தெரிவித்துள்ளார்.
கப்பலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதை ஈரானும் உறுதிபடுத்தி இருக்கிறது. கப்பலை பிடித்ததற்கு ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இச்சம்பவத்தால் இரு நாடுகளிடையான பதட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/Rd7xBWE
0 Comments