``நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு..!” - சேலம் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள டி.எம் செல்வகணபதிக்கு வாக்கு சேகரிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஓமலூர் வந்தார். அப்போது பேசிய அவர், “உதயசூரியன் சின்னத்திற்கு நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும், மோடிக்கு நீங்கள் வைக்கும் வேட்டு. கொரோனா காலத்தில் ஒரு கையில் விளக்கு புடிங்க, ஒரு கையில் மணி ஆட்டுங்க, கொரோனா வைரஸ் பயந்து ஓடிரும் என்றவர் தான் மோடி. மேலும் கறுப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார். 15 பைசாவாவது போட்டாரா? சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாடு 100 சதவீதம் வெற்றி அல்ல; அது 80 சதவீதம் வெற்றிதான் - 40க்கு 40 வெற்றி பெற்றால் தான் இளைஞரணி மாநாடு வெற்றி பெற்றதாகும்.

கருணாநிதி வழியில் ஸ்டாலினும் சொல்வதைத்தான் செய்வார், செய்வதைதான் சொல்வார். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளதை காங்கிரஸும் சொல்லி உள்ளது. மோடி அவர் சுட்ட வடையை அவரே சாப்பிட்டு விடுவார். கேஸ் விலையை 800 ஏற்றி விட்டு தேர்தல் நேரத்தில் 100 ரூபாய் குறைக்கிறார். ஆனால் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை 500, பெட்ரோல் விலை 75, டீசல் விலை 65, அனைத்து டோல்கேட்களும் அகற்றப்படும். சேலத்தில் 10 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் முதல்வர் அனைவருக்கும் நிறைய செய்துள்ளார். யார் காலில் விழுந்தும், தவழ்ந்து போயும் ஸ்டாலின் முதல்வராகவில்லை. அதனால்தான் சொன்னதை எல்லாம் அவர் செய்தார்.

தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் கட்டாயம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். சேலத்தில் 5.60 லட்சம் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். தேர்தல் என்பதால்தான் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். அடுத்த 10 நாட்கள் மோடி தமிழ்நாட்டில் தங்கினாலும் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாது.

இ.பி.எஸ் Vs உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் சமம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. சேலத்தில் மட்டும் பின்க் பஸ் மூலம் மகளிர்கள் 20 கோடி பயணங்கள் சென்றுள்ளனர். நாடு முழுவதும் 24 சதவீதம் பெண்கள் மட்டுமே படித்து விட்டு வேலைக்கு போகிறார்கள்; ஆனால் தமிழ்நாட்டில் 54 சதவீதம் பெண்கள் படித்து விட்டு வேலைக்கு போகிறார்கள். இதை அதிகரிக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை பார்த்து கனடாவில் காலை உணவு திட்டத்தை துவங்கி உள்ளனர்.

இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே முன்மாதிரியாக தமிழ்நாடு உள்ளது. ஒன்றிய பாஜக-வுக்கும், துணை நின்ற அதிமுக-வுக்கும் இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை; அவர் இறந்ததும் அடிமை கூட்டத்தை வைத்து தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழைத்து விட்டார்கள். தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கு கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் 1 ரூபாயை கூட ஒதுக்கவில்லை. மதுரையில் பிரதமரும், எடப்பாடி பழனிசாமியும் நட்டு வைத்த எய்ம்ஸ் கல்லை நான் தூக்கிட்டு வந்துட்டேன். மருத்துவமனையை கட்டினால்தான் கல்லை திருப்பி தருவேன். யார் பிரதமர் என்பது எங்களுக்கு முக்கியம் அல்ல! யார் பிரதமராக கூடாது என்பதுதான் முக்கியம். நான் வெறும் கல்லைதான் காட்டினேன்; எடப்பாடி பழனிசாமி பல்லை காட்டுகிறார். டூத் பேஸ்ட் விளம்பரம் போல பல்லை காட்டுகிறார்கள். அமைதிப்படை படத்தில் வரும் அம்மாவாசை போல சிரிக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்தால் நான் ஏன் கேள்வி கேட்க போகிறேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/BGjf7V0

Post a Comment

0 Comments