மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.பி கம்பம் செல்வேந்திரன், "உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒரு தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர் என்றால் அதற்கு காரணம் வேண்டும். தான் பிறந்த தமிழ்நாட்டை தனது உழைப்பால் உயர்த்தி காட்டி திராவிட மாடல் ஆட்சியை ஆசிய கண்டம் முழுவதும் பேசும் அளவு செய்ததால்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம்.
தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் வீட்டிற்குள் நுழைவதைப்போல கொரோனா தொற்று காலத்தில் ஆட்சிக்கு வந்தோம், கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார்.
பேருந்துகளில் பயணம் செய்வதன் மூலம் மாதம், 888 ரூபாய் ஒவ்வொரு பெண்ணிற்கும் மீதமாகிறது என ஆய்வறிக்கை கூறுகிறது. ஆகவே மாதம் ரூபாய் ஆயிரம் கொடுப்பது போல பெண்களுக்கு மாதம் 888 ரூபாயும் வழங்கி வருகிறோம்.
நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. 96 கோடியே 86 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட போகிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இத்தனை பேர் வாக்களிக்கும் தேர்தல் திருவிழாவின் தேதியை இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிக்க உள்ளனர்.
நமக்கு எதிரிகள் இன்றுவரை யார் யார் எனத் தெரியவில்லை, ஒரே கூட்டணியில் இருப்பவர்கள் கூட, யாருடன் செல்லலாம் என கூட்டணி குறித்து கனவு கண்டு வருகின்றனர்.
அதிமுக உடைந்த கண்ணாடி அந்த கண்ணாடியில் யாரும் முகம் பார்க்க மாட்டார்கள். அதிமுகவினர் தகுதியோடு வளர வில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக கோட்டைக்கு வந்துவிட்டனர். அதனால் அவர்கள் வெற்றி பெற முடியாது.
1925 -ல் ஆரிய திராவிட போர் தொடங்கியது. ஆரிய மன்னன் ராமனுக்கும், திராவிட மன்னன் ராவணனுக்கும் நடந்த யுத்தம் என அன்றே ஜவஹர்லால் நேரு எழுதினார்.
அரசியல் களத்தில் இந்த போர் இன்னும் முடிவடையாமல் உள்ளது. இந்த தேர்தலில் ஆரிய-திராவிட யுத்தம் மீண்டும் வரும்.
கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் இந்தியாவின் பெருமுதலாளிகள்., பெருமுதலாளிகளின் காவலராக பிரதமர் மோடி உள்ளார். 10 கோடிக்கும் மேல் கடனை திருப்பி செலுத்தாமல் ஓடி போனவர்களில் 28 பேரில் 27 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கர்நாடகவைச் சேர்ந்த மல்லையா, ஒருவர்கூட தமிழர் இல்லை.
வரும் தேர்தல், தமிழன் யார் என்பதை உணர்த்த வேண்டிய தேர்தல், நமக்கு வேண்டிய உரிமைகளை தர மறுக்கும் பாஜக-வை வீழ்த்த வேண்டிய தேர்தல், தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிட்டாலும், அத்துனை தொகுதிகளிலும் டெப்பாசிட் இழக்கும். வடக்கில் வேண்டுமானால் கால் ஊன்றலாம், தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது" என பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/viQD9ZV
0 Comments