`தேர்தல் முடிந்ததும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர்மீது மோடி நடவடிக்கை எடுப்பார்'- டிடிவி தினகரன்

தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்று பெரியகுளம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் டிடிவி தினகரன்

அப்போது பேசிய டிடிவி தினகரன், ``தேனி தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் தற்போது ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி-யாக இருப்பதால் அதனை வெளிப்படுத்தவில்லை. அப்போது தான் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதியன்று ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு தேனி வந்த போது ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி ஆகியோர் என்னை, இங்கு போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். அதன் பிறகு தான் தேனியில் போட்டியிட முடிவு செய்தேன். பிறரிடம் இருந்து அபகரிப்பது எனக்கு பிடிக்காது.

இந்த தேர்தலில் இந்திய அளவில் 543 தொகுதிகளில் 40 தொகுதிகள் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது. திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், ஸ்டாலின் உங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் எனக் கேளுங்கள். அதேபோல பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலே எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலை சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு தமிழே பேசத் தெரியாது. இரண்டு வார்த்தைகளை சேர்த்து பேசத் தொரியது. டிடிவி தினகரன் என எனது பெயரை கூட முழுமையாக சொல்ல இயலாத எடப்பாடி பழனிசாமி, தன்னை பிரதமர் வேட்பாளர் எனக் கூறியா வாக்கு கேட்க போகிறார்.

வாக்கு சேகரிக்கும் டிடிவி தினகரன்

இங்குள்ள ஆட்சியாளர்கள் அனுமதியோடு தான் போதைப் பொருள் கடத்தல் நடக்கிறது. ரவுடி ராஜ்ஜியமான திமுகவில் போதைப்பொருள் கும்பல் உள்ளது. ஒரு சொட்டு கூட மது இல்லாத மாநிலமாக்குவேன் என சொன்ன ஸ்டாலின், தற்போது போதைப் பழக்கத்தை வளர்த்து வருகிறார். தேர்தல் பணியில் உள்ள மோடி மீண்டும் பிரதமரானதும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார். ஜெயலலிதாவை கண்டு ரவுடிகள் அஞ்சியது போல, சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் எல்லாம் பிரதமர் மோடியை கண்டு அஞ்சுகின்றனர். 

போதைப் பொருள் கடத்தல்

காங்கிரஸ் உடன் கூட்டணியை வைத்து ஓட்டு கேட்கும் திமுக, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கான தண்ணீரை பெற்றுத் தர முடியுமா. அதே போல ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணையின் பிரச்னையில் கூட்டணியில் உள்ள கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் சுமுக தீர்வை ஏற்படுத்தி தருவாரா ஸ்டாலின்?'' எனக் கேள்வி எழுப்பினார்.



from India News https://ift.tt/OFg10bT

Post a Comment

0 Comments