நடிகை கங்கனா ரனாவத் முதல் மேனகா காந்தி வரை..! - பாஜகவின் 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் ஒரு பார்வை

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து அறிவித்துக்கொண்டிருக்கின்றன. பா.ஜ.க ஏற்கனவே நான்கு கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் நேற்று மாலையில் 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இப்பட்டியலில் சமீபத்தில் கட்சியில் சேர்ந்த தொழிலதிபர் நவீன் ஜிந்தால், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்தியா, முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி, நடிகை கங்கனா ரனாவத் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

111 பேர் கொண்ட பட்டியலில் 17 மாநில வேட்பாளர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். அதில் ஆந்திராவில் 6 பேரும், பீகாரில் 17 பேரும் , ஒடிசாவில் 21 பேரும், மேற்கு வங்கத்தில் 19 பேரும் வேட்பாளர்கள் பட்டியல் இடம் பெற்றுள்ளனர்.

மகனுடன் மேனகா காந்தி

அடிக்கடி பா.ஜ.க விற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த வருண் காந்திக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவரின் பிலிபிட் தொகுதி காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த ஜிதின் பிரசாதாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அஸ்வினி குமார் செளபே, வி.கே.சிங், ஆனந்த் குமார் ஹெக்டே ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு அவரது சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேரளா பா.ஜ.க தலைவர் சுரேந்திரன் வயநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராமாயாணம் டி வி சீரியலில் ராமராக நடித்த நடிகர் அருண் கோயில் மீரட் தொகுதியிலும், முன்னாள் துணை பிரதமர் தேவிலால் மகன்  ரஞ்சித் செளதாலா ஹிசார் தொகுதியிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாதியா மேற்கு வங்கத்தின் தம்லுக் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அபிஜித் அரசியலில் ஈடுபடவேண்டும் என்பதற்காக தனது நீதிபதி வேலையை ராஜினாமா செய்துள்ளார். ஒடிசாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சம்பல்பூர் தொகுதிலும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சகோதரர் மனைவி சீதா சோரன் தும்கா தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். சீதா சோரன் சமீபத்தில் தான் பா.ஜ.க வில் சேர்ந்தார்.

பாஜக

வருண் காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவரது தாயார் மேனகா காந்திக்கு சுல்தான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாட்னா சாஹிப் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதே போன்று முன்னாள் காங்கிரஸ் எம்.பியான நவீன் ஜிந்தால் பா.ஜ.க வில் சேர்ந்த சில நிமிடத்தில் குருஷேத்ரா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/pMBvDHf

Post a Comment

0 Comments