அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்பாடியில், தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுகக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ‘‘இந்தியாவில் இரண்டாவது சுதந்திரப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகம் என்ற ‘சீதை’ பத்து ஆண்டுகளாக அடைப்பட்டுக் கிடக்கிறார். அந்த சீதையை மீட்பதற்கு ‘கலியுக ராமனாக’ நம்முடைய தலைவர் ஸ்டாலின் ‘வில்லேந்தி’ வந்துக்கொண்டிருக்கிறார்.
இந்தியாவைக் காப்பதற்கு ஒரேயொரு தலைவராகவும் நமது தளபதி மட்டுமே திகழ்ந்துகொண்டிருக்கிறார். எனவே, மீண்டுமொரு முறை எனக்கு வாய்ப்புத் தாருங்கள்’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தி.மு.க-வின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், ‘‘ ‘ஜெகத்ரட்சகன் அறிமுகம் இல்லாதவரா... அறிமுகக் கூட்டம் என்று போட்டிருக்கிறீர்களே?’ என்று நம்முடைய அமைச்சர் காந்தி பேசினார். அக்காள் மகளை கல்யாணம் செய்ய வேண்டுமானாலும், வீடு பார்க்கப் போவான். பெண் பார்க்க போவான். அது மாதிரிதான் இதுவும்.
ஜெகத்ரட்சகன் ஒரு ‘கொடை வள்ளல்’. விளம்பரம் இல்லாமல் வாரிக் கொடுப்பவர். கோயிலுக்கும் கொட்டிக் கொடுப்பார். கல்விக்காகவும் அள்ளிக் கொடுப்பார். மருத்துவம் என்றாலும் கணக்குப் பார்க்க மாட்டார்.
பல ஆபத்துகளில் இருந்து அவரை காப்பாற்றியதும் அவர் செய்த புண்ணியம்தான். அவரின் வளர்ச்சிக் கண்டு பொறுக்க முடியாதவர்கள், வருமானவரித் துறையை விட்டு புரட்டிப் பார்த்தார்கள்; தோண்டிப் பார்த்தார்கள். வழக்குக்குமேல் வழக்குப் போட்டார்கள். இன்றைக்கும் சுமக்க முடியாத அளவுக்கு ஜெகத்ரட்சகனின் தோள் மீது வழக்குகள் இருக்கின்றன. ஆனாலும், தளபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்’’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/yuaZozn
0 Comments