"ராமர் கோயில் கட்டியதற்கு ஓட்டு போடுவார்கள் என நினைத்தால்... முட்டாள்கள்" - தயாநிதி மாறன் பேச்சு

மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஆரப்பாளையத்தில் தமிழக முதல்வரின் 71-வது பிறந்தாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில்  தயாநிதி மாறன் எம்.பி கலந்து கொண்டு பேசும்போது, "2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மாபெரும் புரட்சியை செய்தனர். 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தயாநிதி மாறன்

கொரோனா காலத்தில் மற்ற மாநிலத்தில் முதல்வர்கள் வெளியவே வரவில்லை. ஆனால், தமிழக முதல்வரோ கொரோனா வாடிற்குள் சென்று நலம் விசாரித்தார்.

தயாநிதி மாறன்

தமிழ்நாட்டில் நான்காவது வளர்ச்சியடைந்த நகரமாக மதுரை உள்ளது. மீனாட்சியம்மன் கோயிலில் வீர வசந்தராயர் மண்டபம் 18 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

மோடி வரும் போதெல்லாம் தமிழ் மீது காதல் கொள்கிறார். இதே போல்தான் கேரளா, கர்நாடகாவிலும் கூறுகிறார். கோழி கூவுவது போல் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது மொழியில் பேசி வாக்குகளை களவாட பார்க்கிறார்.

சமஸ்கிருதத்துக்கு ஓராண்டுக்கு 1500 கோடி செலவு செய்கின்றனர். ஆனால், தமிழுக்கு வெறும் 28 கோடிதான் ஒதுக்கி உள்ளனர்.

இந்தியாவில் 80 சதவிகித துறைமுகங்கள் தனியாரிடம் உள்ளது, அதுவும் அதானியிடம் உள்ளது. தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை. தமிழகம் வந்த மோடி வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவில்லை.

தயாநிதி மாறன்

பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டி உள்ளனர், இதற்காக மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தார்கள் என்றால் அவர்கள் முட்டாள்கள்" என்றார்.



from India News https://ift.tt/f8elagY

Post a Comment

0 Comments