சென்னையை அடுத்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மேலாளராக இருந்த சங்கரராமன் 2004-ம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் தேதி கோயிலுக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதிகள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அப்போது, ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஏ.ராஜசேகரன், குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார், சங்கராச்சாரியாருக்கு வேண்டப்பட்ட கெளரி காமாட்சி, உயர் நீதிமன்ற மதுரை கிளை பிரிவு அதிகாரி ரமேஷ்குமார் ஆகியோருடன் தொலைப்பேசியில் பேசியதாக புகார் கூறப்பட்டது.
இது சம்பந்தமாக உயர் நீதிமன்றம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை, காவல்துறை அதிகாரி நடத்திய உண்மை கண்டறியும் விசாரணை அடிப்படையில் ராஜசேகரனுக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் நடத்திய இந்த விசாரணையின் அடிப்படையில் ராஜசேகரனை பணிநீக்கம் செய்து 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் நீதிபதி ராஜசேகரன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, `நீதிபதிகள் மிகுந்த நேர்மையுடன் இருக்க வேண்டும். இந்த வழக்கில் முன்னாள் நீதிபதி ராஜசேகரனின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன’ எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/lbzJIPZ
0 Comments