இன்று தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்!
கனமழை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அங்கு செல்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்க கடலில் ஏற்பட்ட வழிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் மத்திய அரசின் நிவாரண நிதி வழங்கும் விவகாரத்தில் மாநில அமைச்சர்களுக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கும் கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று பாதிப்புகளை பார்வையிட உள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மழை பாதிப்புகள் குறித்து ஆலோசனையும் நடத்த உள்ளார். முன்னதாக மழை பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினிடம் பேசினார். அப்போது வெள்ளப் பாதிப்பை மதிப்பிட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நியமித்திருப்பதாக அவரிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/UN28q0j
0 Comments