வெள்ள பாதிப்பு: `பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்திருந்தார்’ - முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை அழைத்து பேசினார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், ``மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட உடனே, தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளம் குறித்துக் கேட்டறிய பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்திருந்தார்.
கடும் நிதி நெருக்கடிக்கிடையே மாநில அரசு மேற்கொண்டு வரும் பெரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவரிடம் விளக்கிக் கூறி, ஒன்றிய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவியைக் கோரினேன்.
இந்த இரட்டைப் பேரிடரில் இருந்து தமிழ்நாடு மீண்டெழ ஒன்றிய அரசு உதவும் என உறுதியளித்த பிரதமர், வெள்ளப் பாதிப்பை மதிப்பிட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்.” எனக் குறிப்பிட்டுள்ளார். நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடி பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/5JRdPmx
0 Comments