நெல்லையில் வடிய தொடங்கும் வெள்ளம்!
தென் மாவட்டங்களில் கடந்த இருநாள்களாக பெய்த கனமழையை தொடர்ந்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நெல்லையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று மழையில் தாக்கம் குறைந்துள்ள நிலையில் ஆற்றிலும் வெள்ளம் குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நெல்லையிலும் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது.

இதனிடையே நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு வெள்ள நீரில் ஆண் ஒருவர் பிணம் மிதந்தது. இது தொடர்பான புகார் சென்ற பிறகு, பணியாளர்கள் வந்து உடலை மீட்டனர்.
from India News https://ift.tt/XKMLAd1
0 Comments