தஞ்சாவூர் அருகே உள்ள பாபநாசம் கோவிந்தநாட்டுசேரியில் அரசு மணல் குவாரியும், மணல் விற்பனை நிலையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2 ஆயிரம் லாரிகள் மணல் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதிக்கபட்ட அளவை விட விதிகளை மீறி இங்கு மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. கடந்த மாதம் அமலாக்கதுறையினர் இந்த குவாரிக்கு வந்து சோதனை செய்து விட்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மணல் விற்பனை நிலையத்தில் ஒரு நாளைக்கு 2,000 லாரிகள் மணல் எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பொதுப்பணித்துறையினர் விதியை மீறி முறைகேடாக டிராக்டர்களில் மணல் அள்ளுவதற்கு அனுமதி கொடுத்திருப்பதாக கூறி லாரி உரிமையாளர்கள் நூற்றுகணக்கான லாரிகளுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து லாரி உரிமையாளர்கள் தரப்பில் கூறியதாவது, `அரசு மணல் விற்பனை கிடங்கில், மணல் எடுப்பதற்கு ஆறு சக்கரம் உள்ள சிறிய லாரிகளுக்கு 2 யூனிட் மற்றும் 10 சக்கரம் உள்ள கனரக டாரஸ் லாரிகளுக்கு 3 யூனிட் மணல் எடுப்பதற்கும், உள்ளூர் தேவைகளுக்கு மாட்டு வண்டிகளிலம் மணல் எடுப்பதற்கும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இதுவரை டிராக்டர்களில் மணல் அள்ள அரசு ஆணை பிறப்பிக்கவில்லை.
தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மணல் விற்பனை கிடங்குகளிலும், ஆன்லைனில் பதிவு செய்த லாரிகளுக்கு மட்டுமே மணல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தஞ்சாவூர் கோவிந்த நாட்டுசேரியில் டிராக்டர்களில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசாணை பிறப்பிக்கப்படாத சூழலில், சட்டத்திற்கு புறம்பாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் டிராக்டரில் ஒரு யூனிட் மணல் அள்ள ரூ. 2,650 பெற்றுக்கொண்டு முறைகேடாக அனுமதி அளித்து வருகின்றனர்.
இந்தநிலை தொடர்ந்தால் 12 சக்கரம், 14, 16 சக்கரம் கொண்ட லாரிகளில், லோடு ஆட்டோக்களில் யாரு வேண்டுமனாலும் மணல் அள்ளும் நிலை உருவாகும். இதனால், தமிழகத்தில் 55,000 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டிரைவர்கள் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 75 டிராக்டர்களுக்கு முறைகேடாக மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
முறையாக அரசாணைப்படி ஆன்லைனில் புக் செய்த லாரிகளுக்கு குறைந்த அளவில் தான் மணல் அள்ள அனுமதிக்கின்றனர். இதனால் லாரி உரிமையாளர்கள் லாரிகளை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, டிராக்டர்களில் மணல் அள்ளுவதை அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் தலைவர் ராசாமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகளுடன் அதன் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்’ எனத் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/ZV4SB2D
0 Comments