Tamil News Today Live: நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறிய விவகாரம்: `அமித் ஷா பதவி விலக வேண்டும்!' - திருமாவளவன்

`அமித் ஷா பதவி விலக வேண்டும்' - திருமாவளவன்

நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, பார்வையாளர்களாக வந்த இருவர் மக்களவையில் குதித்து, கலர் புகையை பரவ செய்தனர். நாடாளுமன்ற பாதுகாப்பில் இந்த விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில் விசிக தலைவரும் எம்.பி-யுமான திருமாவளவன், ``மக்களவையில் நண்பகல் ஒரு மணியளவில் பார்வையாளர் மாடத்திலிருந்து அவைக்குள்ளே 10-12 அடி உயரத்திலிருந்து தாவி குதித்த இளைஞர்கள், 'தானா சாஹி நைச் சலேகா' என்று ஆவேசமாகக் கூச்சலிட்டனர். 'சர்வாதிகாரத்தை ஏற்க இயலாது' என்பதே அவர்களின் முழக்கம்.

அவர்கள் வீசியடித்தது கண்ணீர்ப்புகை அல்ல; ஏதோவெரு நெடி மிகுந்த வேதிப்பொருளின் புகை. அதனைப் பரவச் செய்யும் குப்பியைத் தமது காலணி (ஷூ) களில் மறைத்துக் கொண்டு வந்து அவையில் வீசியுள்ளனர். உடனே மஞ்சள் வண்ணப்புகை அவையெங்கும் பரவ, அங்கிருந்த உறுப்பினர்கள் அது நச்சுப்புகையோவென அஞ்சி பதறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

நாடாளுமன்றம்

நாட்டையாளும் உயர் மன்றத்தில் உள்ளவர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் பொறுப்பேற்று பதவி விலகுவதே அறஞ்சார்ந்த நேர்மைத் திறமாகும்.

மக்களவைக்குள்ளே வரும் அனுமதிக்காக அந்தப் பார்வையாளருக்குப் பரிந்துரைத்த பாஜக உறுப்பினரை உடனே பதவி்நீக்கம் செய்ய வேண்டும்.

பாதுகாப்புச் சோதனக்குப் பொறுப்பான அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும்.” என குறிப்பிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/sLh0Kci

Post a Comment

0 Comments